TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சுரங்கச் சுற்றுலாத் திட்டம்

July 27 , 2025 12 hrs 0 min 15 0
  • ஜார்க்கண்ட் மாநில அரசானது சமீபத்தில் இந்தியாவின் முதல் சுரங்கச் சுற்றுலாத் திட்டத்தைத் தொடங்கியது.
  • இது சுரங்கத் துறையில் மேற்கொள்ளப்படும் இந்தியாவின் முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான தொழில்துறை சுற்றுலாத் திட்டமாகும்.
  • சுரங்கத் தளங்களைத் தவிர, இதன் சுற்றுலாத் தளங்களில் பழனி நீர்வீழ்ச்சி, பற்றடு பள்ளத்தாக்கு மற்றும் திரு நீர்வீழ்ச்சி போன்ற இயற்கைத் தளங்களும் அடங்கும்.
  • சுரங்கச் சுற்றுலாவை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் வேண்டி மத்திய நிலக்கரித் தளங்கள் (CCL) நிறுவனத்துடன் ஐந்து ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திட்டது.
  • இந்தியாவின் கனிம வளத்தில் கிட்டத்தட்ட 40% அளவை ஜார்க்கண்ட் மாநிலம் கொண்டுள்ளது.
  • இதன் சோதனைக் கட்டம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள வடக்கு உரிமாரி என்ற திறந்த வெளிச் சுரங்கத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்