இந்தியாவின் முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பற்று அட்டைகள்
August 18 , 2023 695 days 434 0
சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பற்று அட்டைகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய வங்கியாக ஏர்டெல் பண வழங்கீட்டு வங்கி மாறியுள்ளது.
இந்தப் பற்று அட்டைகளானது சான்றளிக்கப்பட்டச் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருளான r-PVC எனும் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.
உற்பத்தி செய்யப்பட உள்ள 50,000 அட்டைகள் அடங்கிய ஒவ்வொரு உற்பத்தி தொகுதியும், சந்தையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வழக்கமான PVC அட்டைகளின் உற்பத்தியுடன் ஒப்பிடும் போது 350 கிலோகிராம் கார்பன் வெளியேற்றத்தினைக் கணிசமான அளவில் குறைக்கும்.
மேலும், r-PVC அட்டைகளின் உற்பத்தியினால் ஹைட்ரோகார்பன் உபயோகமானது 43% குறையும்.
இது இந்த மாதிரியான அட்டைகளின் மீதான உற்பத்தியின் போது மேற்கொள்ளப்படும் பெட்ரோலியப் பயன்பாட்டினைத் திறமிக்க வகையில் குறைக்கிறது.