இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சார் பொது வாக்கெடுப்பின் 10 ஆண்டுகள் நிறைவு
April 22 , 2023 1015 days 472 0
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 2013 ஆம் ஆண்டில் ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, ஒடிசாவில் உள்ள ராயகடாவைச் சேர்ந்த டோங்கோரியா கோண்ட், என்ற எளிதில் பாதிக்கப் படக் கூடிய பழங்குடியினர் குழுவினர் (PVTG) ஒரு சட்ட ரீதியிலான போராட்டத்தில் வெற்றி பெற்றனர்.
ஒரிசா சுரங்கத் தொழில் கழகத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தொடர்ந்த வழக்கில், வேதாந்தா நிறுவனம் பாக்சைட்டுக்காக நியாம்கிரி மலைகளில் சுரங்கப் பணி மேற்கொள்ள விடுத்த கோரிக்கையை ரத்து செய்து நியாம்கிரி மலை மீதான இந்த இனத்தவரின் கலாச்சார, மத மற்றும் ஆன்மீக உரிமைகளை உச்ச நீதி மன்றம் அங்கீகரித்தது.
உச்ச நீதிமன்றமானது இந்தச் சமூகத்திடம் இருந்து திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்குப் பாதிக்கப்பட்ட கிராமச் சபைகள் மத்தியில் ஒரு பொது வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தப் பொது வாக்கெடுப்பில், அந்தத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கீட்டிற்கு எதிராக அனைவரும் ஒருமனதாக வாக்களித்தனர்.