TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் குறியிடப்பட்ட ஆமை

May 18 , 2026 8 days 99 0
  • இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் குறிக்கப்பட்ட கங்கை மென்-ஓடு ஆமை னது 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய அழிந்து வரும் உயிரினங்கள் தினம் அன்று காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் விடுவிக்கப்பட்டது.
  • பிரம்மபுத்திரா நதிப் படுகையில் இந்த ஆமையின் பருவகால இடப்பெயர்வு, இனப் பெருக்க வாழ்விடங்கள் மற்றும் அதன் நடமாட்ட எல்லை ஆகியவற்றை ஆராய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் அசாம் வனத்துறை மற்றும் தேசிய புவியியல் சங்கத்தின் ஆதரவுடன், இந்திய வனவிலங்கு நிறுவனத்தால் (WII) செயல்படுத்தப்பட்டது.
  • கங்கை மென்-ஓடு ஆமையானது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (WPA), 1972 இன் அட்டவணை I-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
  • இந்த இனம் IUCN செந்நிறப் பட்டியலில் 'அருகி வரும் இனம்' என்றும், வனவிலங்கு மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டின் (CITES) இணைப்பு I-இல் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்