இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் குறிக்கப்பட்ட கங்கை மென்-ஓடு ஆமை ஆனது 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய அழிந்து வரும் உயிரினங்கள் தினம் அன்று காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் விடுவிக்கப்பட்டது.
பிரம்மபுத்திரா நதிப் படுகையில் இந்த ஆமையின் பருவகால இடப்பெயர்வு, இனப் பெருக்க வாழ்விடங்கள் மற்றும் அதன் நடமாட்ட எல்லை ஆகியவற்றை ஆராய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் அசாம் வனத்துறை மற்றும் தேசிய புவியியல் சங்கத்தின் ஆதரவுடன், இந்திய வனவிலங்கு நிறுவனத்தால் (WII) செயல்படுத்தப்பட்டது.
கங்கை மென்-ஓடு ஆமையானது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (WPA), 1972 இன் அட்டவணை I-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
இந்த இனம் IUCN செந்நிறப் பட்டியலில் 'அருகி வரும் இனம்' என்றும், வனவிலங்கு மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டின் (CITES) இணைப்பு I-இல் சேர்க்கப்பட்டுள்ளது.