இந்தியாவின் முதல் தனியார் வழிசெலுத்தல் மையம் – ACEN
December 5 , 2025 7 days 67 0
திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆனந்த் வழிசெலுத்தல் சிறப்பு மையத்தினை (ACEN) இஸ்ரோ தலைவர் திறந்து வைத்தார்.
ACEN என்பது ஆனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனத்தினால் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் துறை வழிசெலுத்தல் மையம் ஆகும்.
இந்த மையம் ஆனது உள்நாட்டு வழி செலுத்தல் உணர்வுக் கருவிகள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வழி செலுத்தல் இணைவு மற்றும் NavIC (இந்தியச் செயற்கைக் கோள் திரளின் தகவல் மூலமான வழிசெலுத்தல்) அமைப்பின் சிறந்தப் பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்த நுட்பத்தில் வெளிநாட்டு சார்புநிலையைக் குறைக்க ACEN இந்தியாவிற்குள் வழி செலுத்தல் அலகுகளின் MRO (பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு) ஆகியவற்றை மேற்கொள்ளும்.