மத்திய அரசானது உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ், இந்தியாவின் முதல் தேசிய தீவிரவாத எதிர்ப்புக் கொள்கையை இறுதி செய்து வருகிறது.
இந்தக் கொள்கையானது, செயல்பாடு மற்றும் தேசியப் புலனாய்வு முகமையின் (NIA) உளவுத்துறை உள்ளீடுகளுடன் வரைவு செய்யப்பட்டு வருகிறது.
தீவிரவாத சம்பவங்களைத் தடுக்கவும், அதனை எதிர்த்துப் போராட மற்றும் எதிர் நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒரே சீரான கட்டமைப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
டிஜிட்டல் வழி தீவிரமயமாக்கல், தடையற்ற எல்லைகளை தவறாகப் பயன்படுத்துதல், போலியான ஆதார் தகவல்களைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெற்ற பரிமாற்ற வலையமைப்புகள் ஆகியவை முக்கியக் கவனம் செலுத்தும் பகுதிகளில் அடங்கும்.
தேசியப் புலனாய்வு கட்டமைப்பு (NATGRID) ஆனது அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களிடையே உளவுத்துறை பகிர்வை ஆதரிக்கும்.