TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தேசிய ஆயுதத் தரவுத் தளம்

December 30 , 2025 15 hrs 0 min 94 0
  • உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு என்று மத்திய அரசு இந்தியாவின் முதல் தேசிய ஆயுதத் தரவுத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த தரவுத் தளத்திற்குத் தொலைந்து போன, கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் மீட்கப் பட்ட துப்பாக்கி (LLRF) தரவுத் தளம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதோடு இது காணாமல் போன ஆயுதங்களைக் கண்காணிப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இது 2025 ஆம் ஆண்டு தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டின் போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப் பட்டது.
  • இந்தத் தரவுத் தளம் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் உள்ள தேசியப் புலனாய்வு முகமையினால் (NIA) உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
  • இது மாநிலக் காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளுக்கு (CAPF) சொந்தமான, அரசுக்குச் சொந்தமான துப்பாக்கிகளின் விவரங்களைக் கொண்டு உள்ளது.
  • இந்த அமைப்பு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள காவல்துறை, துணை இராணுவப் படைகள் மற்றும் விசாரணை முகமைகளிடையே நிகழ்நேரத் தரவுப் பகிர்வை அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்