TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தேசிய வருமான ஆய்வுகள்

January 31 , 2026 14 days 81 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) குடும்ப வருமானம் மற்றும் பெருநிறுவனச் சேவைகள் குறித்த இந்தியாவின் முதல் நாடு தழுவிய ஆய்வுகளுக்குத் தயாராகி வருகிறது.
  • இந்த ஆய்வுகளில் தேசிய குடும்ப வருமான ஆய்வு (NHIS) மற்றும் பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு (ASISSE) ஆகியவை அடங்கும்.
  • ஏப்ரல் 2026ல் களப்பணியைத் தொடங்கும் இந்த இரண்டு ஆய்வுகளும் முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படும்.
  • NHIS ஆனது குடும்ப வருமானப் பங்கீடு, வாழ்க்கை நிலைமைகள், உழைப்பு, மூலதனம் மற்றும் நிலம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் குறித்த தரவுகளைச் சேகரித்து, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதாரப் பகுப்பாய்விற்கு ஆதரவு அளிக்கிறது.
  • ASISSE ஆனது, சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பு (GSTN) கட்டமைப்பைப் பயன்படுத்தி, ஒருங்கிணைக்கப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களில் கவனம் செலுத்தி, மொத்த மதிப்புக் கூட்டல், மூலதன உருவாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்கள் போன்றவற்றைச் சேகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்