இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகம்
May 25 , 2018 2605 days 835 0
மத்திய அமைச்சரவை, இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகத்தை மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலில் (மேற்கு) அமைப்பதற்கான அவசரச் சட்டத்திற்கு முன்மொழிவு வழங்கியுள்ளது.
இந்த அவசரச் சட்டமானது, தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதா 2017ன் வரிசையில் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களவையில் ஆகஸ்ட் 2017ல் கொண்டு வரப்பட்ட இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த பல்கலைக் கழகமானது இந்த வகையில் நாட்டின் முதல் பல்கலைக் கழகமாகும். மேலும் இப்பல்கலைக் கழகம் சிறந்த சர்வதேச செயல்முறைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.