TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலம்

August 6 , 2026 6 days 64 0
  • இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலம் - மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நிறுவப்படும்.
  • இதனை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்புத் துறை (DoT) மேற்கொள்ளும்.
  • இந்தியா, தற்போதுள்ள சுமார் 50 கோடி பயனர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, 2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி (1 பில்லியன்) மக்களை 5ஜி தொழில் நுட்பத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026-இன் 10-வது பதிப்பிற்கான கருத்துருவை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் வெளியிட்டார் (‘எல்லைகளற்ற வளர்ச்சி’).
  • புது தில்லியில் நடைபெறவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றத்தின் ஒரு மைல்கல் பதிப்பு இதுவாகும்.
  • இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2026-இன் 10-வது பதிப்பு நான்கு முக்கிய தூண்களை மையமாகக் கொண்டுள்ளது.
  • இது, டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட, பாதுகாப்பான மற்றும் வளர்ச்சி சார்ந்த எதிர்காலத்தை உருவாக்கும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது.
  • சிருஷ்டி – எதிர்காலத்தை உருவாக்குதல்’, இது அடுத்த தலைமுறை டிஜிட்டல் உள் கட்டமைப்பை வடிவமைக்கும் புத்தாக்கம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்.
  • சுரக்ஷா – நம்பிக்கையை வலுப்படுத்துதல், இது பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்.
  • சஷக்த் – வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், இது டிஜிட்டல் வாய்ப்புகளுக்கான அனைவரையும் உள்ளடக்கிய அணுகலை உறுதி செய்வதோடு, குடிமக்கள், வணிகங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சம்வர்தன் – வளர்ச்சியை ஊக்குவித்தல், இது பொருளாதார வளர்ச்சி, முதலீடு, தொழில்முனைவு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்தியா ஒரு உலகளாவிய தொழில்நுட்பத் தலைவராக உருவெடுப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பங்கை எடுத்துரைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்