TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நடமாடும் MRI அமைப்பு

May 9 , 2026 16 hrs 0 min 22 0
  • இந்தியாவின் முதல் நடமாடும் காந்த அதிர்வு பிம்பமாக்கல் (MRI) அமைப்பானது, புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப் பட்டது.
  • இந்த நடமாடும் MRI அமைப்பு, தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs), அவசர சிகிச்சை வார்டுகள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகளில் உள்ள ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குப் படுக்கை அருகிலேயே மூளை வருடல் / ஸ்கேன் எடுக்க அனுமதிக்கிறது.
  • ஒரு மிகக் குறைந்த புலன் கொண்ட இந்த MRI சாதனத்தை நேரடியாக நோயாளியிடம் கொண்டு செல்ல முடியும் என்பதால், நோயாளிகளை MRI அறைகளுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
  • இது தில்லி AIIMSல் உள்ள நரம்பியல் நிலைமைகளுக்கான மையத்தில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
  • இந்த அமைப்பு பக்கவாதம், காயம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மூளைக் கோளாறுகளை விரைவாகக் கண்டறிய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்