இந்தியாவின் முதல் பல்நோக்கு செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பு
December 31 , 2024 136 days 214 0
BharatGen என்பது இந்தியக் குடிமக்களுக்கு எனப் பெரும் ஆக்கப்பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவினை பல்வேறு இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
இந்தியாவின் பன்முக மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
BharatGen ஆனது, செயற்கை நுண்ணறிவில் போதுமான அணுகல் வசதிகள் இல்லாத மொழிகளில் கவனம் செலுத்தி, பல முதன்மைத் தரவுகளைச் சேகரிப்பதற்காக பாரத் டேட்டா சாகர் முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.