இந்தியாவின் முதல் பழங்குடியின மரபணுத் தொகுதி வரிசையாக்கத் திட்டம்
July 21 , 2025 6 days 51 0
பழங்குடியினச் சமூகங்களை மட்டுமே மையமாகக் கொண்ட மரபணுத் தொகுதி வரிசையாக்க முன்னெடுப்பைத் தொடங்கிய முதல் இந்திய மாநிலமாக குஜராத் மாறி உள்ளது.
இந்த முன்னெடுப்பு ஆனது, அம்மாநிலத்தின் 17 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த 2,000 நபர்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தும்.
"குஜராத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கான குறிப்பு சார் மரபணு தரவுத் தளத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பிலான இந்தத் திட்டத்தினை குஜராத் மாநில உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (GBRC) செயல்படுத்தி வருகிறது.
இந்த முன்னெடுப்பு ஆனது அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை, தலாசீமியா மற்றும் சில பரம்பரை வழியானப் புற்றுநோய்கள் போன்ற மரபணு கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட இடத்தினை முக்கிய இலக்காக வைத்து சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தும்.
சேகரிக்கப்பட்ட மரபணுத் தரவு ஆனது இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான குறியீடுகளை அடையாளம் காணவும், தனிப் பயனாக்கப்பட்ட சுகாதாரத் தீர்வுகளின் உருவாக்கத்தினை ஆதரிக்கவும் பயன்படுத்தப்படும்.