இந்தியாவின் முதல் பாக்சைட் சான்றளிக்கப்பட்ட மேற்கோள் பொருள் (CRM)
April 10 , 2023 989 days 512 0
தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) என்ற நிறுவனமானது, பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் (BARC) இணைந்து, பாக்சைட் சான்றளிக்கப்பட்ட மேற்கோள் பொருளினை (CRM) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
இதற்கு BARC B1201 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுவே இந்தியாவின் முதலாவது மற்றும் உலகளவில் ஐந்தாவது சான்றளிக்கப்பட்ட மேற்கோள் பொருளாகும்.
ஒரு சான்றளிக்கப்பட்ட மேற்கோள் பொருள் என்பது ஒரு குறிப்பிட்ட வகையிலான அளவீட்டுத் தரமாகும்.
சோதனை ஆய்வகங்கள், அளவீட்டுக் கருவிகளை அளவீடு செய்யவும், சோதனை நடைமுறைகளை மதிப்பீடு செய்யவும் மற்றும் தரக் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக சான்றளிக்கப்பட்ட குறிப்புப் பொருட்களைப் பயன்படுத்தவும் செய்கின்றன.