இந்தியாவின் முதல் பெண் போர் விமானப் படைத் தலைவர் - பாவனா காந்த்
August 17 , 2026 2 days 97 0
இந்திய விமானப்படையின் முதல் பெண் 'டாப் கன்' (Top Gun) விமானியாகி பாவனா காந்த் வரலாறு படைத்துள்ளார்.
அவனி சதுர்வேதி மற்றும் மோகனா சிங் ஆகியோருடன் இணைந்து, நாட்டின் முதல் பெண் போர் விமானிகள் குழுவின் ஒரு பகுதியாக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இவர் இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார்.
2019-ஆம் ஆண்டில், பகல் நேரப் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் விமானி ஆனார்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானி இவராவார்; பின்னர் 2024-ஆம் ஆண்டு குடியரசு தின விமான சாகச நிகழ்ச்சியிலும் (fly-past) இவர் பங்கேற்றார்.
குவாலியரில் உள்ள 'தந்திரோபாய மற்றும் வான்வழிப் போர் மேம்பாட்டு நிறுவனம்' (TACDE)-இல், மதிப்புமிக்க 'போர் விமானப் படைத் தலைவர்' (FCL) பயிற்சியை வெற்றிகரமாக முடித்த முதல் பெண் போர் விமானி இவராவார்.
இந்தப் பயிற்சி, அமெரிக்கக் கடற்படையின் "டாப் கன்" (Top Gun) பயிற்சிக்கு இணையானதாகக் கருதப்படுகிறது; இது அதிகாரப்பூர்வமாக 'ஸ்டிரைக் ஃபைட்டர் டாக்டிக்ஸ் இன்ஸ்ட்ரக்டர்' (Strike Fighter Tactics Instructor) திட்டம் என்று அழைக்கப் படுகிறது.