TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பொட்டாஷ் சுரங்கம்

June 4 , 2025 3 days 39 0
  • இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம் (HZL) என்பது இராஜஸ்தானில் இந்தியாவின் முதல் பொட்டாஷ் மற்றும் ஹாலைட் தொகுதியையும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓர் அரிய வகைத் தனிம கூறுகள் (REE) தொகுதியையும் ஏலத்தில் கைப்பற்றியுள்ளது.
  • கோல் இந்தியா நிறுவனம் ஆனது, கிராஃபைட் மற்றும் வெனடியம் போன்ற கனிம வளத் தொகுதியைக் கைப்பற்றியுள்ளது.
  • பொட்டாஷ் என்பது உரத் தொழில் துறையில், குறிப்பாக NPK உரங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய கனிமமாகும்.
  • இந்தியாவானது தற்போது அதன் பொட்டாஷ் தேவையில் 100 சதவீதத்தினைக் கனடா, பெலாரஸ், ஜோர்டான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
  • இதில் HZL நிறுவனம் எனபது உலகின் மிகப்பெரியதான ஒருங்கிணைந்த துத்தநாக உற்பத்தியாளராகவும், வெள்ளி மீதான உற்பத்தியில் உலகின் மிக ஐந்து முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும் உள்ளது.
  • இந்த நிறுவனம் ஆனது சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகம் செய்கிறது மற்றும் இந்தியாவின் முதன்மைத் துத்தநாகச் சந்தையில் தோராயமாக 77 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்