தேசிய மண் ஆய்வு மற்றும் நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் பணியகம் (NBSS&LUP) இந்தியாவின் முதல் மண் அமைப்பு வரைபடத்தை உருவாக்கியுள்ளது.
இது நாடு முழுவதும் ஹெக்டேர் அளவில் எண்ணிமப்படுத்தப்பட்ட மண் வகைப்பாடு தரவுகளை வழங்குகிறது.
இது குறிப்பிட்ட நிலங்களுக்கு சிறந்த பயிர்களை அடையாளம் காண விவசாயிகளுக்கு உதவுகிறது, மேலும் பிராந்தியத்திற்கேற்ற கொள்கைகள், பயிர் திட்டமிடல் மற்றும் நிலப் பயன்பாட்டு உத்திகளுக்கு ஆதரவளிக்கிறது.
மண்ணில் உள்ள மணல், வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றின் விகிதத்தைக் கொண்டு மண் அமைப்பு தீர்மானிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் மண் ஆழ வரைபடம், மண் அமைப்பு வரைபடத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
மண் ஆழ வரைபடமும் NBSS&LUP நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
NBSS&LUP என்பது ICAR-இன் கீழ் உள்ள ஒரு தேசிய நிறுவனம் ஆகும் என்பதோடு இது மகாராஷ்டிராவின் நாக்பூரில் அமைந்துள்ளது.