TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மாதிரி G-20 உச்சி மாநாடு

February 1 , 2023 823 days 460 0
  • இந்திய ஜனநாயகத் தலைமைத்துவக் கல்வி நிறுவனமானது, சமீபத்தில் மாதிரி G-20 உச்சி மாநாட்டினை நடத்தியது.
  • இது இவ்வகையிலான முதல் மாநாடு ஆகும்.
  • G-20 அமைப்பிற்கான இந்தியப் பிரதிநிதி அமிதாப் காந்த் இந்த உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
  • இது மும்பையில் உள்ள இந்திய ஜனநாயகத் தலைமைத்துவக் கல்வி நிறுவன வளாகத்தில் நடத்தப்பட்டது.
  • இக்குழுவில் உறுப்பினராக உள்ள நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தினை உள்ளடக்கியதால், G-20 உச்சி மாநாடு ஆனது இந்தியா மற்றும் பிற உறுப்பினர் நாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள இதன் உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்