இந்தியாவின் முதல் மின்னணு வங்கி உறுதிப் பத்திரத் திட்டம்
September 16 , 2022 1066 days 543 0
HDFC வங்கியானது, மின்னணு வங்கி உறுதிப் பத்திரத்தினை (e-BG) வழங்கிய இந்தியாவின் முதல் வங்கி ஆக மாறியது.
மின்னணு வங்கி உறுதிப் பத்திரத் திட்டமானது தேசிய மின் ஆளுமைச் சேவைகள் நிறுவனத்துடன் (NeSL) இணைந்து தொடங்கப்பட்டது.
இது காகிதம் சார்ந்த நேர விரயமாகும் செயல்முறையின் தேவையை நீக்குகிறது.
வங்கியில் இருந்து நேரடியாகப் பெற்று, பயனாளிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப் பட்டு, முத்திரையிடல் மற்றும் மறு சரிபார்ப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த செயல் முறைக்கு பெரும்பாலும் 3 முதல் 5 நாட்கள் வரை மட்டுமே ஆகிறது.