இந்தியாவின் முதல் மின்னிழை – விளக்கு இல்லா பஞ்சாயத்து
April 17 , 2018 2806 days 1204 0
கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பிலிகோடு (Pilicode) எனும் கிராமப் பஞ்சாயத்தானது நாட்டின் முதல் மின்னிழை விளக்குகள் இல்லா கிராமப் பஞ்சாயத்தாக (Filament bulb-free grama panchayat) உருவாகியுள்ளது.
கிராமப் பஞ்சாயத்தை ஆற்றல் சேமிப்புத் திறனுடையதாக (Energy efficient) மாற்றுவதனை நோக்கமாகக் கொண்ட “ஊர்ஜா யானம்” (Oorja Yaanam scheme’) எனும் தன்னுடைய தனித்துவ திட்டத்தின் கீழ் பயன்பாட்டில் உள்ள அனைத்து மின்னிழை விளக்குகளுக்குப் பதிலாக LED பல்புகளை மாற்றம் செய்து பிலிகோடு கிராமப் பஞ்சாயத்து இந்த அரிய சாதனையைப் புரிந்துள்ளது.
கேரள மாநில அரசின் ஆற்றல் மேலாண்மை மையத்தின் (Energy Management Centre-EMC) ஆதரவுடன் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆற்றல் சேமிப்புச் சட்டத்தை (2001) அமல்படுத்தும் கேரள மாநிலத்தின் ஆற்றல் மேலாண்மை மையத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப் படுகிறது அமல்படுத்துகிறது.
ஆற்றல் மேலாண்மை மையத்தால் நிறுவப்பட்ட மாநில ஆற்றல் பாதுகாப்பு விருதினை (State energy conservation award) கடந்த ஆண்டு பிலிகோட் கிராமப் பஞ்சாயத்து வென்றது குறிப்பிடத்தக்கது.