TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் முப்பரிமாண (3D) அச்சிடப்பட்ட செயற்கை பவளப்பாறை நிலைநிறுத்தம்

June 26 , 2026 2 days 46 0
  • பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் (PMMSY) கீழ் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் கடற்கரையில் இந்தியாவின் முதல் முப்பரிமாண (3D) அச்சிடப்பட்ட செயற்கை பவளப்பாறை தொகுதிகள் நிலைநிறுத்தப்பட உள்ளன.
  • இத்திட்டமானது கடலோர பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதையும் மற்றும் மீன்களின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட கடல்வாழ் வாழ்விட மறுசீரமைப்புக்கான முயற்சியாகும்.
  • இந்த பவளப்பாறை தொகுதிகள், ICAR-மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையத்துடன் (CMFRI) இணைந்து 'டிவாஸ்டா மானுபேக்சரிங் சொல்யூஷன்ஸ்' – மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் காப்பக புத்தொழில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இந்தத் தொகுதிகள் கடல்வாழ் உயிரினங்கள் ஒட்டிக் கொள்வதையும், வாழ்விட உருவாக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் பிளவுகள் மற்றும் மடிப்புகளுடன் கூடிய சிக்கலான 3D கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.
  • இந்த சோதனைத் திட்டமானது இந்தியக் கடலோரப் பகுதிகளில் பெரிய அளவிலான நிலைநிறுத்தலுக்கான ஆயுள், சுற்றுச்சூழல் செயல்திறன் மற்றும் பொருத்தம் ஆகியவற்றை மதிப்பிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்