TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் முழுமையான காகிதமில்லா மாவட்ட நீதிமன்றம்

January 13 , 2026 10 days 67 0
  • கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பேட்டா நீதித்துறை மாவட்டம், நாட்டின் முதல் காகிதமில்லா மாவட்ட நீதிமன்றமாக மாறியுள்ளது.
  • இது ஒரு முழுமையான காகிதமில்லா நீதிமன்ற அமைப்பாகச் செயல்பட உள்ளது, இது இந்தியாவின் நீதித்துறை டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
  • இந்தப் புதிய அமைப்பின் கீழ், வழக்குகளைத் தாக்கல் செய்வது முதல் இறுதித் தீர்ப்புகளை வழங்குவது வரை, மாவட்ட நீதித்துறையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்படும்.
  • விசாரணைக்கு முந்தைய நடவடிக்கைகள், சாட்சியங்களைப் பதிவு செய்தல், இடைக்கால மனுக்கள் மற்றும் இறுதித் தீர்ப்பு உட்பட நீதித்துறைச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டமும் இப்போது மின்னணு முறையில் நடத்தப்படும்.
  • இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நீதித்துறை உதவி கருவிகளையும் ஒருங்கிணைக்கிறது.
  • இந்த முழுயான அமைப்பு முற்றிலுமாக கேரள உயர் நீதிமன்றத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • தலைமை நீதிபதி சூர்ய காந்த் மிஸ்ரா இந்த மாற்றத்தை நீதி வழங்குவதில் ஓர் அடிப்படை மாற்றம் என்று விவரித்து, அதை "பசுமை நீதித்துறை" என்று அழைத்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்