இந்தியாவின் முதல் லித்தியம் செல் உற்பத்தி ஆலையானது ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள அதன் தொழிற்சாலையில் தனது உற்பத்திக்கான ஒரு முன்னோட்டத்தை ஆரம்பித்துள்ளது
இது அடுத்த மாதம் முதல் வணிக ரீதியான மின்கல அடுக்குச் செல்களின் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
சென்னையைச் சேர்ந்த முனோத் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் இந்த அதி நவீன ஆலையானது நிறுவப் பட்டுள்ளது.
தற்போது நிறுவப்பட்டுள்ள இந்த ஆலையின் திறன் 270 Mwh ஆகும்.
தினசரி 10Ah திறன் கொண்ட 20,000 செல்களை இந்த ஆலை உற்பத்தி செய்ய முடியும்.