உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தற்போதைய தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினருமான பினாகி சந்திர கோஸ் இந்தியாவின் முதல் ஊழல் எதிர்ப்பு அமைப்பு எனப்படும் குறைதீர்ப்பு அமைப்பு அல்லது லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.
பிரதமரைத் தலைமையாகவும் இந்தியாவின் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் சிறந்த நீதியாளரான முகில் ரோஹத்கி ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட இந்த உயர்மட்ட தேர்வுக் குழுவானது இவரை இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது.
தேசிய அளவில் லோக்பால் மற்றும் மாநில அளவில் லோக் ஆயுக்தா ஆகியவை பிரதமர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட உயர் அளவிலான பொதுப் பணியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் அமைப்பாகும்.