நப்கிசான் ஃபைனான்ஸ் லிமிடெட் (NABKISAN Finance Limited)நிறுவனமானது தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மை (WASH) துறைக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் சமூகப் பத்திரத்தை தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிட்டு உள்ளது.
இந்தப் பத்திரம் 180 கோடி ரூபாயைத் திரட்டியதுடன் மேலும் 2031 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதிர்ச்சியடைகிறது.
இந்த நிதி கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூகங்களில் பாதுகாப்பான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும்.
இப்பத்திரம் CRISIL AAA (நிலையானது) மற்றும் CARE AAA (நிலையானது) கடன் மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது.
நப்கிசான் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனமானது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும்; Water.org தொழில்நுட்ப ஆலோசகராகவும் அறிவுசார் பங்குதாரராகவும் இப்பத்திரத்திற்கு ஆதரவளித்தது.