இந்தியாவின் முதல் விண்வெளி குவாண்டம் தகவல்தொடர்பு
March 27 , 2021
1511 days
710
- வெற்றிகரமாக, 300 மீட்டர் தொலைவிற்கு விண்வெளி குவாண்டம் தகவல் தொடர்பினை இஸ்ரோ செயல்விளக்கம் காட்டியுள்ளது.
- இது இந்தியாவின் இவ்வகையிலான முதல் முயற்சியாகும்.
- இந்தச் செயல்விளக்கமானது மறைக்கப்பட்ட முதன்மை குவாண்டம் சமிக்ஞைகளைப் பயன்படுத்திய நேரலை காணொளியை உள்ளடக்கியதாகும்.
- இது குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயற்கைக் கோள் தரவு தகவல் தொடர்பின் நிபந்தனையற்ற பாதுகாப்பிற்கான ஒரு முக்கியச் சாதனையாகும்.
- சூரிய ஒளியின் நேரடி குறுக்கீடு எதுவும் இல்லாமல் இருப்பதற்காக இந்தச் சோதனை இரவில் மேற்கொள்ளப் பட்டது.
- செயற்கைக் கோள் சார்ந்த குவாண்டம் தகவல்தொடர்பினை அமைக்கும் இஸ்ரோவின் இலக்கில் இது ஒரு திருப்புமுனையாகும்.
Post Views:
710