TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் AI அமைச்சர்

May 24 , 2026 16 hrs 0 min 56 0
  • அமைச்சரவை அளவில் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) பிரத்தியேக இலாகாவை உருவாக்கிய முதல் இந்திய மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
  • கேரளாவில் புதிய AI துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் முதல் AI அமைச்சராக பி.கே. குஞ்ஞாலிக்குட்டி பொறுப்பேற்றார்.
  • செயற்கை நுண்ணறிவு (AI) இலாகாவானது, தொழில்துறை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) துறைகளின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் கேரளாவில் புதிய ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசாங்கம் பதவியேற்ற பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • இந்த புதிய அமைச்சகம் AI ஆளுமை, புதுமை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் AI அடிப்படையிலான பொதுச் சேவைகளில் கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்