இந்தியாவின் முதல் AI-ஆதரவு பெற்ற பிஜிட்டல் வங்கி கிளை
May 25 , 2026 123 days 242 0
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு பெற்ற பிஜிட்டல் வங்கி கிளையானது கவுகாத்தியில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவால் திறந்து வைக்கப் பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் எளிதான சேவைகளை வழங்க, நேரடி வங்கிச் சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் "பிஜிட்டல்" வங்கி சேவை இணைக்கிறது.
இந்தக் கிளையில் AI வசதி கொண்ட சுய-சேவை இயந்திரங்கள், காகிதமில்லா பண வைப்பு மற்றும் எடுப்பு வசதிகள், மற்றும் டிஜிட்டல் அறிமுக அமைப்புகள் ஆகியவை உள்ளன.