இந்தியாவின் முதல் C295 போர்த்திறம் சார்ந்தப் போக்குவரத்து விமானம்
May 16 , 2023 777 days 358 0
புதிய தலைமுறைப் போர்த்திறம் சார்ந்த விமானமான இந்தியாவின் முதல் ஏர்பஸ் C295, தனது முதல் விமானப் பயணத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்த முதல் விமானச் சோதனையானது முதலாவது இந்தியாவில் தயாரிப்போம் என்ற விண்வெளித் திட்டத்திற்கான குறிப்பிடத்தக்க சாதனையைப் பிரதிபலிக்கிறது.
இந்திய விமானப் படையானது C295 என்ற விமானத்தினை இயக்குகின்ற உலகின் ஒரு மிகப்பெரிய அமைப்பாக மாற உள்ளது.
முதல் 16 விமானங்கள் ஸ்பெயினின் செவில்லி என்னுமிடத்தில் தொகுக்கப்பட்டு, பிறகு இந்தியாவிற்குப் 'பறக்கும்' நிலையில் வழங்கப்படும்.
அடுத்து வழங்கப்பட உள்ள 40 விமானங்கள் இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான தொழில்துறை கூட்டுறவின் ஒரு பகுதியாக இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (TASL) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுத் தொகுக்கப் படும்.