மார்ச் 31, 2026 ஆம் தேதிக்குள் விரிவான நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) பதிவேட்டைத் தொடங்கும் முதல் இந்திய மாநிலமாக ஒடிசா மாற உள்ளது.
இந்தப் பதிவேடு, CKD பரவல் குறித்த நம்பகமானத் தரவை உருவாக்கும் மற்றும் ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பிற்கு உதவும்.
தேசியத் தகவல் மையம் (NIC) இந்தப் பதிவேட்டிற்காகப் பிரத்தியேக மென்பொருளை உருவாக்கி வருகிறது.
இந்தப் பதிவேடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரையிலான CKD பாதிப்புகளை உள்ளடக்கி, ஏற்கனவே உள்ள தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பும்.
ஒடிசாவில் CKD பாதிப்பு 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 14% ஆகும் என்ற நிலையில்சுமார் 60% பாதிப்புகள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவையாக உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒடிசாவில் 19,888 CKD பாதிப்புகளும் 4,718 இறப்புகளும் பதிவாகியுள்ளன.