மகாராஷ்டிரா நவி மும்பையில் ஒரு EduCity-கல்வி நகரத்தினை அமைக்க உள்ளது.
இது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான இந்தியாவின் முதன்முதலான கல்வி வளாகமாக இருக்கும்.
நகரம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (CIDCO) ஆனது ஐக்கியப் பேரரசின் யார்க் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஆகிய சில வற்றுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகங்கள் நவி மும்பையில் தங்கள் வெளிநாட்டு வளாகங்களை அமைக்க உள்ளன.