2023–24 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 778.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
இதில் 437.10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதியும், 341.11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேவை ஏற்றுமதியும் அடங்கும்.
2013–14 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி மதிப்பு 67% அதிகரித்துள்ளது.
17.90% பங்கைக் கொண்ட அமெரிக்கா, இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி நாடாக இருந்தது.
அதைத் தொடர்ந்து 8.23% பங்குடன் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் 5.16% பங்குடன் நெதர்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், முன்னணி 10 நாடுகள் இணைந்து 50.98% பங்கைக் கொண்டிருந்தன.
2004 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி பிராந்தியமாக வட அமெரிக்கா தொடர்ந்து திகழ்ந்தது.
முன்னணி 10 இடங்களில் சீனா (3.85%), சிங்கப்பூர் (3.33%), ஐக்கியப் பேரரசு (3.00%), சவுதி அரேபியா (2.67%), வங்காளதேசம் (2.55%), ஜெர்மனி (2.27%), மற்றும் இத்தாலி (2.02%) ஆகியவை அடங்கும்.