TNPSC Thervupettagam

இந்தியாவின் மூன்றாவது சிவிங்கிப்புலிகள் வாழ்விடம்

March 30 , 2026 11 hrs 0 min 37 0
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள வீராங்கணா துர்காவதி புலிகள் காப்பகம் (VDTR), திட்டம் சிவிங்கிப்புலிகளின் கீழ் சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான இந்தியாவின் மூன்றாவது இடமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இது நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம் மற்றும் துர்காவதி வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது.
  • இது மத்தியப் பிரதேசத்தின் சாகர், தாமோ மற்றும் நர்சிங்பூர் மாவட்டங்களில் பரவி உள்ள பந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ளது.
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) அங்கீகாரத்துடன் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
  • இது ஒரு பெரிய புல்வெளி மற்றும் வனச் சூழல் அமைப்பில் சிவிங்கிப்புலிகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் இந்திய ஓநாய்கள் இணைந்து வாழ்வதை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்