TNPSC Thervupettagam

இந்தியாவின் வரைவு பருவநிலை நிதி வகைபிரித்தல்

May 11 , 2025 2 days 27 0
  • நிதித் துறை அமைச்சகமானது, ‘இந்தியாவின் பருவநிலை நிதி வகை பிரித்தல்’ வரைவு கட்டமைப்பினை வெளியிட்டுள்ளது.
  • இது மின்சாரம், போக்குவரத்து, கட்டிடங்கள், வேளாண்மை மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வினைக் குறைப்பதில் சவால் மிகுந்த இரும்பு மற்றும் எஃகு மற்றும் சிமெண்ட் போன்ற துறைகள் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியது.
  • இந்த வகை பிரித்தல் ஆனது மேம்பாட்டு ஆதாயங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏற்பு மற்றும் மீள்தன்மையை உருவாக்குவதை வலியுறுத்தும்.
  • இந்தப் புதிய ஆவணமானது, பல செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை “பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையிலானது” மற்றும் “மாற்றத்தினை ஆதரிக்கும் வகையிலானது” என இரண்டு வகைகளாக வகைப்படுத்தும்.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய அளவிலான உமிழ்வை அடைவது உள்ளிட்ட ஒரு தொடர் பருவநிலை இலக்குகளை இந்தியா நிர்ணயித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் உமிழ்வு தீவிரத்தினை சுமார் 45% குறைப்பதே அதன் இடைக்கால இலக்காகும்.
  • கூடுதலாக, 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவம் அடிப்படையிலான மூலங்களிலிருந்து தோராயமாக சுமார் 50% மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் ஒரு நிலைக்கு மாறுவதற்கான இலட்சிய இலக்கினை இந்தியா நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்