TNPSC Thervupettagam

இந்தியாவின் வாழ்வாதார மாதிரி - எத்தியோப்பியா

November 10 , 2025 11 days 84 0
  • கிராமப்புற வறுமையைக் குறைப்பதற்கும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் இந்தியாவின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்ட (DAY-NRLM) மாதிரியை ஏற்க எத்தியோப்பியா நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • DAY-NRLM திட்டம், 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2016 ஆம் ஆண்டில் இது மறு பெயரிடப் பட்டது.
  • இது கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் முதன்மைத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டம் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மூலம் நிலையான வாழ்வாதாரங்கள், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக அணிதிரட்டலை ஊக்குவிக்கிறது.
  • இது இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 6 ஒன்றியப் பிரதேசங்களில் சுமார் 91 லட்சம் சுய உதவிக் குழுக்களில் 10 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களை அணி திரட்டியுள்ளது.
  • இந்தத் திட்டம் கடன் அணுகல், திறன் பயிற்சி மற்றும் பொருளாதாரத் தன்னிறைவை உறுதி செய்வதற்காக தொழில்முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்