TNPSC Thervupettagam

இந்தியாவின் விண்வெளித் துறை விரிவாக்கம்

November 27 , 2026 16 hrs 0 min 30 0
  • பெங்களூருவைச் சேர்ந்த கேலக்ஸ்ஐ (GalaxEye) மற்றும் பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் (Bellatrix Aerospace) ஆகிய நிறுவனங்கள் கேலக்ஸ்ஐ நிறுவனத்தின் அடுத்த 30 செயற்கைக்கோள்களுக்கு விண்வெளி உந்துவிசை அமைப்புகளை வழங்குவதற்கான பல ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • 2020 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்களுக்கு விண்வெளித் துறை திறந்துவிடப்பட்ட பிறகு, ஓர் இந்தியத் தனியார் விண்வெளி நிறுவனம் மற்றொரு இந்தியத் தனியார் விண்வெளி நிறுவனத்திற்கு வழங்கிய மிகப்பெரிய வணிகத்திற்கு வணிகம் (B2B) ஒப்பந்தமாக இது விவரிக்கப்படுகிறது.
  • மேகங்கள், புகை மற்றும் இருள் ஆகியவற்றிற்கு இடையேயும் படங்களைப் பிடிப்பதற்காக ஒளியியல் மற்றும் செயற்கைத் துளை ரேடார் (SAR) படமாக்கலை இணைக்கும் உலகின் முதல் ஆப்டோசார் (OptoSAR) செயற்கைக்கோள் தொகுப்பை கேலக்ஸ்ஐ உருவாக்கி வருகிறது.
  • செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் நகர்வதற்கும் தங்கள் நிலைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் உதவும் மின்சார மற்றும் பசுமை உந்துவிசை அமைப்புகளை பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் உருவாக்குகிறது.
  • 2026 ஆம் ஆண்டு மே 3 அன்று ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ஏவுகலன் மூலம் ஏவப்பட்ட கேலக்ஸ்ஐ நிறுவனத்தின் திருஷ்டி திட்டம் (Mission Drishti), சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட உலகின் முதல் ஆப்டோசார் செயற்கைக்கோளாக அமைந்தது; பின்னர் புவிக்காந்தப் புயலுக்குப் பிறகு அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்