இந்தியாவின் விண்வெளி சார் ஊட்டச்சத்துப் பரிசோதனைகள்
May 21 , 2025 14 hrs 0 min 36 0
விண்வெளியில் மனித உயிர்கள் மிக நன்கு நிலை பெற்று வாழும் நிலையை ஆய்வு செய்வதற்காக வேண்டி இந்தியா தனது முதல் உயிரியல் பரிசோதனைகளை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நடத்த உள்ளது.
இந்தத் தனித்துவமான சோதனைகள் ஆனது, உயிரித் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இஸ்ரோ நிறுவனத்தின் தலைமையில் BioE3 என்ற முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப் படுகின்றன.
நீண்ட கால அளவு விண்வெளிப் பயணங்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சாத்தியமான உணவுப் பொருளாக உண்ணக் கூடிய நுண்ணுயிரிகளின் வளர்ச்சியில் நுண் ஈர்ப்பு விசை மற்றும் விண்வெளி கதிர்வீச்சின் தாக்கத்தை அக்குழு ஆராய உள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் விண்வெளிச் சூழல்களில் பயன்படுத்த எதுவாக மிகவும் பொருத்தமான நுண்ணுயிரி இனங்களை அடையாளம் காண உதவும்.
நுண்ணுயிரிப் பாசிகள் விண்வெளியில் வாழ்வதற்கு ஏற்ற சூழலைத் தக்க வைக்க சிறந்த உயிரிகளாக அவற்றை மாற்றுகின்ற பல முக்கியத் தன்மைகளைக் கொண்டு உள்ளன.
சில இனங்கள் சுமார் 26 மணி நேரத்திற்குள் வளரும் என்பதால் அவை மிகக் குறுகிய வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டுள்ளன.