TNPSC Thervupettagam

இந்தியாவின் விதை ஏற்றுமதி வளர்ச்சி

November 27 , 2026 16 hrs 0 min 23 0
  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தகவலின்படி, 2025–26 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த விதை ஏற்றுமதி 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • இந்தியாவின் விதை ஏற்றுமதி 2024–25 ஆம் ஆண்டில் சுமார் ₹2,023 கோடியாக இருந்த நிலையில், 2025–26 ஆம் ஆண்டில் ₹3,000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
  • விதை நேர்த்தி, விதை ஆரோக்கியம் மற்றும் ஏற்றுமதித் திறன்களை வலுப்படுத்துவதற்காக ஐந்து சிறப்பு மையங்களை (Centres of Excellence) நிறுவ அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
  • தொகுப்பு அணுகுமுறையின் (Cluster approach) அடிப்படையில் விதை ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையைத் தயாரிக்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
  • தற்போது உலகளாவிய விதை வர்த்தகத்தில் இந்தியா 2%-க்கும் குறைவான பங்கையே கொண்டுள்ள நிலையில், விதைத் தொழில் துறை தனது பங்கை 10% ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்