இந்தியாவின் விபத்துக்குள்ளான விக்ரம் லேண்டர் - நாசா கண்டுபிடிப்பு
December 5 , 2019 2054 days 719 0
சந்திரனைச் சுற்றி வரும் நாசாவின் செயற்கைக் கோளானது கடந்த செப்டம்பர் மாதத்தில் சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கிய இந்தியாவின் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்துள்ளது.
தனது சந்திரனுக்கான வேவுப் பணி விண்கலத்தினால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இது செப்டம்பர் 6 ஆம் தேதியன்று அப்பகுதியில் இருந்த விண்கலத்தின் தாக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குப்பைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இது அப்பகுதியில் உள்ள தளத்தின் நிறத் திட்டு அடங்கிய ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
லேண்டரை அடையாளம் கண்டதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் வெகுவாக பாராட்டப் பட்டார்.