இந்தியாவின் விமானப் பயணத்திற்குத் தடை விதிக்கப்பட்ட நபர்களின் பட்டியல்
February 4 , 2020 2018 days 601 0
சமீபத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சகமானது இந்தியாவின் விமானப் பயணத்திற்குத் தடை விதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலைத் தயாரித்து, நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடைமுறையானது விமானப் பயணத்தின் போது பயணிகள் தவறாக நடந்து கொண்டால் அவர்களின் விமானப் பயணத்திற்குத் தடை விதிக்க வழிவகை செய்கின்றது.
விமானப் பயணத்திற்குத் தடை விதிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் என்பது குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் விமானத்தில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பயணிகளின் பட்டியலைக் குறிப்பிடுகின்றது.
இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா மற்றும் கோ ஏர் ஆகிய நான்கு இந்திய விமான நிறுவனங்கள் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகரான குணால் கம்ராவை விமானத்தில் பயணிப்பதற்குத் தடை விதித்துள்ளன.
இவர் இண்டிகோ விமானம் கிளம்பிய பின்பு தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளரான அர்னாப் கோஸ்வாமியிடம் கை குலுக்கியதாகக் கூறி இந்த நிறுவனங்கள் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.