TNPSC Thervupettagam

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்- FY26

July 5 , 2026 3 days 72 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2026 ஆம் நிதியாண்டுத் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் $762.8 பில்லியனாக அதிகரித்துள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனின் விகிதம் 20.8% ஆக அதிகரித்துள்ளது.
  • நிதியாண்டு FY26-இல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் $762.8 பில்லியனாக உள்ளது, இது நிதியாண்டு FY25 உடன் ஒப்பிடுகையில் $26.3 பில்லியன் அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • இதே காலக்கட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் விகிதம் 19.8% இலிருந்து 20.8% ஆக உயர்ந்துள்ளது.
  • வெளிநாட்டுக் கடனில் அரசு, வங்கிகள் மற்றும் தனியார் துறை ஆகியவை வெளி நாட்டு மூலங்களிலிருந்து பெறும் கடன்கள் அடங்கும்.
  • வெளிநாட்டுக் கடன்கள் அதிக அளவில் வாங்கப்பட்டதாலும், உலகளாவிய நாணய மதிப்பீட்டு விளைவுகளாலும் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்