இந்தியா 2024-ஆம் ஆண்டில் 6.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தூய்மையாக்கப்பட்ட வெள்ளியை இறக்குமதி செய்து, பயன்படுத்தும் வகையிலான வெள்ளியின் உலகின் மிகப்பெரிய நுகர்வோராகத் திகழ்கிறது.
2025 நிதியாண்டில், இந்தியா 478.4 மில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்த நிலையில், 4.83 பில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை இறக்குமதி செய்தது.
உலகளாவிய வெள்ளி செயலாக்கத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது என்பதோடு $5.6 பில்லியன் வெள்ளி தாதுக்கள் மற்றும் அடர் வெள்ளி பொருட்களை இறக்குமதி செய்து அதிக மதிப்புள்ள வெள்ளி பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
வெள்ளியானது தொழில் துறைக்கும் எரிசக்தி மாற்றத்திற்கும் மிகவும் இன்றியமையாதது என்பதோடு மேலும் இது மின்னணு சாதனங்கள், சூரிய மின் தகடுகள், மின்சார வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.