இந்தியாவின் 2017 ஆம் ஆண்டின் சுற்றுப்புற இரைச்சல் அளவு அறிக்கை
October 9 , 2018 2554 days 914 0
இந்தியாவின் 2017 ஆம் ஆண்டின் சுற்றுப்புற இரைச்சல் அளவு அறிக்கையின்படி டெல்லியானது மிகவும் இரைச்சல் மிகுந்த பெருநகரமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (CPCB - Central Pollution Control Board) வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.
தேசிய சுற்றுச்சூழல் கொள்கை (NEP - National Environment Policy) 2006-ன்படி, சுற்றுச்சூழல் தர அளவுருவாக சுற்றுப்புற இரைச்சலும் சேர்க்கப்பட்டு குறிப்பிட்ட நகர்ப்புற பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
இதனால், CPCB ஆனது தேசிய சுற்றுப்புற இரைச்சல் கண்காணிப்பு அமைப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது இரைச்சல் கண்காணிப்பு நிலையங்களை இந்தியா முழுவதும் நிறுவுதலை உள்ளடக்கியது ஆகும்.
பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இதில் அடங்கும்.