இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகள் ஆனது, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இந்த மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளில் பன்னிரண்டு மாபெரும் கோட்டைகள் உள்ளன, அவற்றில் பதினொன்று மகாராஷ்டிராவிலும், ஒன்று தமிழ்நாட்டிலும் உள்ளது.
இது தற்போது இந்தியாவின் 44வது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளத்தைக் குறிக்கிறது.
இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகள் கி.பி 17 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பரவியிருந்தன.
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பரவியுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களில், மகாராஷ்டிராவில் உள்ள சல்ஹெர், ஷிவ்னேரி, லோகாட், கண்டேரி, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா, விஜய்துர்க் மற்றும் சிந்து துர்க் ஆகியவை அடங்கும் என்பதோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டையும் இதில் அடங்கும்.
2024 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது அசாமின் 'மொய்தாம் - அஹோம் வம்சத்தின் கல்லறையினை' அதன் மதிப்புமிக்க உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்த்தது என்பதோடு இது இந்தியாவின் 43வது நியமிக்கப்பட்ட தளமாக அமைந்தது.
இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) ஆனது பாரம்பரிய மேலாண்மை மற்றும் திட்டங்களுக்கான முதன்மை அமைப்பாகும்.
இந்தியாவானது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவில் (2021–2025) உறுப்பினராக உள்ளது.