நீதிபதி D.Y.சந்திரசூட் இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டு உள்ளார்.
இவர் 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் 1985 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி வரை நீதித் துறையின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியத் தலைமை நீதிபதி Y.V.சந்திரசூட் அவர்களின் மகன் ஆவார்.
ஓரினச் சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குவது குறித்த இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவினைப் பகுதியளவு ரத்து செய்தல், ஆதார் திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் சபரிமலை விவகாரம் குறித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை அவர் வழங்கினார்.
வெறும் 74 நாட்கள் மட்டுமே குறுகிய பதவிக் காலத்தில் பதவி வகித்த, U.U.லலித்துக்குப் பிறகு இவர் பொறுப்பேற்க உள்ளார்.