இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்று உள்ளார்.
இது இந்தியக் குடியரசுத் தலைவரால் செய்து வைக்கப் பட்டது.
2000 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் தேதியன்று இவர் ஹரியானாவின் இளம் "தலைமை வழக்கறிஞராகப் பதவியேற்றார்.
முதன்முறையாக, பூடான், இலங்கை, கென்யா, மலேசியா, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
காந்த் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இமாச்சலப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.