TNPSC Thervupettagam

இந்தியாவின் 77வது குடியரசு தினம் – முக்கிய அம்சங்கள்

January 29 , 2026 2 days 53 0
  • புது தில்லியின் கர்த்தவ்யா பாதையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைபெற்ற 77வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் போது, ​​குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் இணைந்து தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, விமானப் படை துணை நிலை தளபதியான அக்சிதா தங்கர் வரலாறு படைத்துள்ளார்.
  • சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.
  • உர்சுலா வான் டெர் லேயன், இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற முதல் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஆவார்.
  • இவ்வருட குடியரசு தின அணிவகுப்பின் மையக் கருப்பொருள் ‘வந்தே மாதரம்’ என்பதாகும்.
  • முதன்முறையாக, இந்தியாவின் பாலைவன மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகளை முன்னிலைப்படுத்தும் வகையில், ஒரு பாக்ட்ரியன் ஒட்டகம் (இரட்டைத் திமில் ஒட்டகம்) அணிவகுப்பில் சேர்க்கப்பட்டது.
  • குடியரசு தினம் என்பது, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்