TNPSC Thervupettagam

இந்தியாவின் 77வது குடியரசு தின அணிவகுப்பு – முக்கிய அம்சங்கள்

February 1 , 2026 13 days 97 0
  • டெல்லி பகுதியின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் பவ்னிஷ் குமார் அணி வகுப்புத் தளபதியாக இருந்து அணிவகுப்பை வழிநடத்தினார்.
  • முதன்முறையாக, இந்திய ராணுவம் தனது வான்வழிப் பிரிவு உட்பட, தனித்தனி பிரிவு வாரியான "போர் அணிவகுப்பு வடிவத்தை" காட்சிப்படுத்தியது.
  • உளவுப் பிரிவில், வரலாற்றுச் சிறப்புமிக்க 61 குதிரைப்படை வீரர்கள் முழுப் போர்க் காலச் சீருடையில் அணி வகுத்துச் சென்றனர் அதைத் தொடர்ந்து அதிவேக உளவு வாகனங்கள் சென்றன.
  • இந்தியக் கடற்படையின் அலங்கார ஊர்திகளான, 5 ஆம் நூற்றாண்டின் தைக்கப்பட்ட கப்பல் முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய் கிரி போன்ற நவீன உள்நாட்டுத் தளங்கள் வரையிலான கப்பல்கள் இந்தியாவின் கடல்சார் வரலாற்றை சித்தரித்தது.
  • 77வது குடியரசு தினக் கொண்டாட்டத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட பைரவ் படைப் பிரிவு அணி வகுப்பில் முதன்முறையாகப் பங்கேற்றது.
  • இது வழக்கமான காலாட்படை மற்றும் சிறப்புப் படைகளின் திறன்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்புத் தாக்குதல் நடத்தும் காலாட்படைப் பிரிவாகும்.
  • கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு இராணுவக் குழு, அதன் ராணுவப் பிரிவின் கொடி மற்றும் அட்லாண்டா நடவடிக்கை' மற்றும் 'ஆஸ்பைட்ஸ்' ஆகிய நடவடிக்கைகளின் கொடிகளுடன், அணிவகுப்பில் பங்கேற்றது.
  • ஐரோப்பாவிற்கு வெளியே இதுபோன்ற ஒரு நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் பங்கேற்பு இதுவாகும்.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் 17 ஊர்திகளும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் 13 ஊர்திகளும் இணைந்து மொத்தம் 30 அலங்கார ஊர்திகள்  கர்த்தவ்யா பாதையில் அணிவகுத்துச் சென்றன.
  • இந்தியாவின் முதல் கடல்வழி மெட்ரோவை காட்சிப்படுத்திய கேரளாவின் அலங்கார ஊர்தி, மாநிலத்தின் 100% டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் பசுமைப் போக்குவரத்து, கிராமப்புற செழிப்பு மற்றும் பெண்களால் வழிநடத்தப்படும் டிஜிட்டல் அதிகாரமளித்தல் ஆகிய சாதனைகளைச் சித்தரித்தது.
  • சத்தீஸ்கரின் அலங்கார ஊர்தி "சுதந்திரத்தின் மந்திரம், வந்தே மாதரம்" என்ற கருத்துருவைக் கொண்டிருந்தது.
  • அது பழங்குடியினச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், 1910 ஆம் ஆண்டு பூம்கல் கிளர்ச்சியின் வீரர் குண்டாதூர் மற்றும் மாநிலத்தின் முதல் தியாகியான ஷஹீத் வீர் நாராயண் சிங் ஆகியோரையும் காட்சிப்படுத்தியது.
  • இந்த ஆண்டு, அணி வகுப்பிற்கான தடுப்புகள், நாடு முழுவதும் பாயும் நதிகளின் பெயரால் பெயரிடப்பட்டிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்