இந்தியாவின் AI புரட்சி: விக்சித் பாரதத் திட்டத்திற்கான செயல் திட்டம்
June 9 , 2025 59 days 106 0
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, ‘இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுப் புரட்சி: விக்சித் பாரதத்திற்கான ஒரு செயல் திட்டம்’ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர்களுக்கான தேவையில் மிகப்பெரிய எழுச்சியை இந்தியா எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.
2026 ஆம் ஆண்டிற்குள் 1 மில்லியன் திறம் பெற்ற நபர்களுக்கான தேவை ஏற்படும் என கணிப்புகள் மதிப்பிடுகின்றன.
2047 ஆம் ஆண்டிற்குள் சுமார் 35 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒரு பொருளாதாரமாக மாற நாடு முயன்று வருகிறது.
AICTE தரவுகளின்படி, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட B.Tech கல்வி இடங்களின் எண்ணிக்கை 14.9 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது நான்கு ஆண்டுகளில் இது சுமார் 16 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.
வீபாக்ஸ் என்ற நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு இந்தியத் திறன்கள் அறிக்கை ஆனது, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறை 2025 ஆம் ஆண்டிற்குள் 28.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று கணித்துள்ளது.